பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே உள்ள அரியாண்டிவலசில் மஹா கணபதி, மஹா மாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் ஜூலை, 8ம் தேதி நடக்கிறது. ஜூலை, 7ம் தேதி சனிக்கிழமை காலை, 6 மணிக்கு மங்கள இசையுடன், அனுக்ஞை விக்÷னுஷ்வர பூஜை துவங்குகிறது. தொடர்ந்து யாக பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி காலை, 6 மணிக்கு யாகபூஜை துவங்குகிறது. பூஜையும், வேதிகார்ச்சனா, மூலமந்திர ஹோமம், போன்றவை நடக்கிறது. இரண்டாவது காலயாக பூஜை, பூர்த்தி மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கிரகப்ரீதி, கலசம் ஆலயம் வலம் வருதலும், காலை, 8.45 மணிக்கு மேல், 9 மணிக்குள் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீமாகாளியம்மன் கோபுர மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 9 மணிக்கு மேல், 9.30 மணிக்குள் மஹா கணபதி, மஹா மாகாளியம்மன், மூலவர் மஹா கும்பரபிஷேகம் நடக்கிறது. காலை, 10 மணிக்கு மேல் தசதரிசனம், மஹாபிஷேகம், அலங்கார பூஜை, மஹா தீபாராதனை, முளைப்பாலிகை கரைத்தல், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை, லக்கமநாய்க்கன்பட்டி சிவாலய அர்ச்சகர் செந்தில்நாத சிவாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்கின்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காலை, 7 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது.