பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
வேடசந்தூர் : வேடசந்தூர் அரியப்பித்தம்பட்டி டாக்டர் தோட்டம் தங்கமஹால் திருமண மண்டபத்தில் உள்ள மங்கள விநாயகர்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப ஆராதனம் மற்றும் வேள்வியுடன் நான்கு கால பூஜை நடந்தது. மங்கள விநாயகருக்கு ஹோமத்துடன் கலசங்களுக்கு புனித நீராட்டு நடந்தது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேகத்தை மதுரை மீனாட்சி கோயில் ஸ்தானீக பூஜை மதுர நாயக பட்டர் குழுவினர் நடத்தினர். திருமுறை பண்ணிசையை ரத்தனசபாபதி ஓதுவார் ஓத, மங்கள இசையை பஞ்சாபிகேசன் வாசித்தார். எம்.எல்.ஏ. பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி, ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய தலைவர் நடராசன், தட்டாரபட்டி ஊராட்சி தலைவர் மருதபிள்ளை, முன்னாள் தலைவர் சுப்பிரமணி, ஜ.என்.டி. யூ.சி வட்டார தலைவர் குப்புச்சாமி, கோவை இஞ்சினியர் ராமசாமி, மும்பை டாக்டர் பரமேஸ்வரன், டாக்டர் சுமித்ரா, உட்பட பலர் பங்கேற்றனர். தங்கமஹால் திருமண மண்டபம் உரிமையாளர்கள் டாக்டர்கள் வேல்முருகன், பானுமதி, இன்ஜினியர் குமரன், சிவசித்திரா, சோமு, பாலு ஏற்பாட் டினை செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.