ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருப்பணி தொடக்க விழா நடந்தது. திவான் மகேந்திரன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஸ்கார் கண்ணன் முன்னிலை வகித்தனர். மனோகர குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் வார வழிபாட்டு தலைவர் ராமசாமி, செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் செந்திவேல், வாசுதேவன் பாத்திரக்கடை வி.பி. சிங்காரவேல், சக்திவேல், தஞ்சி சுரேஷ்குமார், ரவிக்குமார் பங்கேற்றனர்.