முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில் கண்ணன் கோயிலில் யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், ஒன்றிய துணை தலைவர் கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி, மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், இளைஞரணி செயலாளர் மாடசாமி, ராம்கோ மேலாளர் பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.