பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
போடி : போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று அரோகரா கோஷத்துடன் கோலகலாமாக நடந்தது. போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 9.45 மணிக்கு நடந்தது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பச்சை கொடியசைக்க,பழநி முருகன் கோயில் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில்,கலசத்திற்கு கோயில் அர்ச்சர் சோமஸ் கந்த குருக்கள் புனித நீர் ஊற்றினார். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை, திருக்கல்யாணம் நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் பழனிராஜ், கோயில் தக்கார் சுதா, பெரியகுளம் கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயில் ஆலோசகர் ரவீந்திரநாத்குமார், போடி சுப்பிரமணியசுவாமி கோயில் ஆலோசகர் ஜெயபிரதீப், திருப்பணி கமிட்டி கவுரவத்தலைவர் முத்துவீர சுருளியம்மாள். போடி நகராட்சி துணைத்தலைவர் வேல்மணி, கவுன்சிலர்கள் மகேந் திரன், ராமமூர்த்தி, கனிநாதன், சித்தரன், கார்த்திக், கணேசன், ஆறுமுகம், கோபிநாத், ஜெயராம் பாண்டியன், அழகர், ராமர், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் சவீதா, துணைத்தலைவர் நித்தியானந்தம், போடி தொகுதி செயலாளர் போதுமணி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் ராஜா, உறுப்பினர் போத்திராஜ். எம்.எம். கோல்டு லோன் உரிமையாளர் முத்துக்காளை, ஏ.பி. அக்ரோ உரிமையாளர் பாலகிருஷ்ணன், ராயல்சிட்டி என்டர் பிரைசஸ் உரிமையாளர் பாண்டியராஜன், சரவணா ஏஜென்சி உரிமையாளர் அங்குவேல் பிரதர்ஸ், கிரீன் ராயல் ரிசார்ட்ஸ் வெல்த் குரூப், போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலைராஜைய பாண்டியன், சந்தியாஸ் மஹால் உரிமையாளர்கள் சம்பத் சந்தியா, ஸ்ரீ மாரி ஸ்வீட்ஸ் உரிமையாளர் ஹரிஹரன்,போடி வர்த்தகர்கள் சங்கத்தலைவர் ரவீந்திரன், செயலாளர் தனசேகரன், பொருளாளர் அய்யனார், இணைசெயலாளர்கள் வேல்முருகன்,சண்முகம், நிர்வாகஸ்தர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், ஆனந்தராஜ், அருணாசலம், பிச்சைமணி, இன்ஜினியர் பாண்டியராஜ், நுகர்வோர் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் சையது அபுதாகீர், பலசரக்கு வர்த்தகர்கள் சங்க தலைவர் செல்வக்குமார், மற்றும் சங்க நிர்வாகஸ்கர் கர்ணா ஹோட்டல் உரிமையாளர் செல்வன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஏலக்காய் வியாபாரம் ஜீவானந்தம், ஜெயலட்சுமி பேஷன் ஜீவல்லரி உரிமையாளர் கணேசன் நாடார் சன்ஸ், குணா மோட்டார் உரிமையாளர் குணசேகர், போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி செயலாளர் சங்கரபாண்டியன்உட்பட வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.