சோமனூர்: சோமனூரில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடந்த யாக பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து வழிபாடுகள் நடத்தி சபரிமலைக்கு செல்வது வழக்கம். தொற்று பரவல் காரணமாக ஐயப்பன் ஊர்வலம் இவ்வாண்டு நடக்கவில்லை. அதனால், கணபதி ஹோமத்துடன், 26 ஆம் ஆண்டு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப சாமிக்கு அலங்கார, தீபாராதனை பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.