நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 100008 வடைமாலை அபிஷேகத்துடன் ஜன.,2ல் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெறள்ளது. இந்நிகழ்ச்சி பின்வரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறிகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது.
சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. முகக்கவசம் அணிந்து வருபர்கள் மட்டும் கோயிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கோயில்களில் பக்தர்கள் தரிசனம் காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தரிசனத்திற்கு Online மூலம் மட்டும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை 5.00 முதல் இரவு 10.00 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கு 500 நபர்கள் மட்டும் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் அவரவர் விருப்பத்திகேற்ப முன்பதிவு செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். திருக்கோயில் அலுவலகத்திலும் Online மூலம் முன்பதிவு செய்யப்படும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர். நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.