திருப்பதியில் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2021 11:12
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டின் ஆன்லைன் முன்பதிவு இன்று (டிச.,24ல்) துவங்கியது. காலை 9 மணி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் நாளை (25ம் தேதி) காலை 9 மணி முதல் ஆன்லைனில் கிடைக்கும் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.