பதிவு செய்த நாள்
24
டிச
2021
03:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இம்மாதம், 31ம் தேதி படித்திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. இதில் கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, தாசில்தார் ஜெயராணி, பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன், மின் வாரியம் நெடுஞ்சாலை, போக்குவரத்து, தீயணைப்பு, வருவாய், காவல், நகராட்சி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.பின் துறை அதிகாரிகள் தங்களது துறைகளில் சார்பில் படித்திருவிழாவிற்கு முன் ஏற்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.கொரோனா தொற்று காரணமாக மலைக்கோவிலில் நள்ளிரவு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள நேரத்தில், பக்தர்கள் வழக்கமாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசிக்கலாம். படிகளுக்கு பூஜை செய்யலாம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு தரிசனம் ரத்தா?: திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா கூறுகையில், முருகன் கோவில் படித் திருவிழா ஆலோசனை கூட்டத்தில், இணை ஆணையர்கொரோனா தொற்று காரணமாக, நள்ளிரவு தரிசனம் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று, அரசு உத்தரவின்படிதான் புத்தாண்டு தரிசனம் மற்றும் நள்ளிரவு தரிசனம் ரத்தா என்பது குறித்து முடிவெடுக்க முடியும், என்றார்.