திருச்செந்துார்: திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில், திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது. இங்கு திருஏடு வாசிப்பு திருவிழா 10ம் தேதி துவங்கியது. 15ம் திருவிழா நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, அதிகாலை அவதாரபதி நடை திறக்கப்பட்டு, 6:00 மணிக்கு பணிவிடையும், பகல் 12:00 மணிக்கு உச்சி பணிவிடையும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் ள்ளியூர் எஸ். தர்மர் துவக்கி ர். பின்னர் பேராசிரியை ஸ்ரீமதி, மகாராஜன் ஆகியோர் திருக்கல்யாண திருஏடு வாசித்தனர். தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் கீல் சந்திரசேகரன், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுதுரை, ருளாளர் ராமையா நாடார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை 3:00 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது.