Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி ... திருச்செந்துாரில் அலைமோதிய பக்தர்கள்:  புனித நீராடி காத்திருந்து வழிபாடு திருச்செந்துாரில் அலைமோதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படியளந்தார் பரமன்: அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி, சொக்கநாதர் உலா
எழுத்தின் அளவு:
படியளந்தார் பரமன்: அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி, சொக்கநாதர் உலா

பதிவு செய்த நாள்

27 டிச
2021
10:12

மதுரை : மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா நடைபெற்றது.

மதுரையில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க அஷ்டமி சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் உலா வந்தனர். ஒரு சமயம் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன். பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும் பிரியாவிடை அம்மனும் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் தனி சப்பரத்திலும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம்.

அதன்படி இன்று (டிச.,27 ) அதிகாலை கோயிலில் இருந்து இருவரும் புறப்பாடாகி, கீழமாசிவீதி வந்தனர். அங்கு இரு சப்பரங்களில், சிவபெருமானும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கீழவெளிவீதி, தெற்கு வெளி வீதி, மேலவெளிவீதி வடக்கு வெளிவீதி என நான்கு வெளி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar