திருச்செந்துாரில் அலைமோதிய பக்தர்கள்: புனித நீராடி காத்திருந்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2021 10:12
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால் சுமார் 5 மணி நேரம் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் மாதமான மார்கழியில் தினசரி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கின்றன. கார்த்திகை, மார்கழி மாதங்களில் இக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் வருகை அதிக அளவு உள்ளது. அதுபோல் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 2 நாட்களாக திருச்செந்துார் கோயிலில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.250, ரூ.100, ரூ.20 போன்ற கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் என அனைத்து வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமிதரிசனம் செய்தனர்.