மொற்வர்தித் கொண்டாட்டம்: ஒமைக்ரான் ஒழிய சிறப்பு பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2021 11:12
ஊட்டி--ஊட்டி அருகே தோடர் பழங்குடி மக்கள் வாழும் முத்தநாடு மந்தில், மொற்வர்தித் பண்டிகை கோலாகலமாக நடந்தது. ஆண்டுதோறும் டிச., இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் மொற்வர்தித் எனப்படும் குல தெய்வ பண்டிகையை, தோடர்கள் கொண்டாடுகின்றனர்.
ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்தில் இவ்விழா நேற்று நடந்தது.காலை 11:50 மணிக்கு தேக்கிஸ் எனும் குலதெய்வ கோவிலில், தோடர் ஆண்கள் மட்டும் எருமை பாலை வைத்து வழிபாடு நடத்தினர். பின் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியாக கோவிலில் காணிக்கை செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பாரம்பரிய உடை அணிந்து ஆடல், பாடலுடன் விழாவை கொண்டாடினர். இளைஞர்கள் இளவட்ட கல்லை துாக்கி தங்களின் வலிமையை வெளிப்படுத்தினர். இன்று வளர்ப்பு எருமைகளை வழிப்பட்டு, அவற்றுக்கு உப்பு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மொற்வர்தித் பண்டிகை பல நுாற்றாண்டுகளாக நடந்து வருகிறது. எங்கள் தெய்வம் எருமை. கோவில் வழிபாடுகளில் அதன் பாலை வைத்து பிரார்த்தனை செய்வோம். கொரோனா, ஒமைக்ரான் நோய்கள் ஒழியவும், விவசாயம் செழிக்கவும் முக்கிய பிரார்த்தனை செய்யப்பட்டது.