ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கோதை நாச்சியார் தொண்டர் குழுமம் சார்பில் ஜீயர்கள் பங்கேற்ற திருப்பாவை முற்றோதல் ஊர்வலம் நடந்தது.
இதை முன்னிட்டு, நேற்று காலை விருதுநகர், தேனி, மதுரை, தென்காசி மாவட்ட பஜனை குழுக்களை சார்ந்த 2ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் பஜனை பாடல்கள் பாடி ஆண்டாளை தரிசித்தனர். மாலையில் ஆடிப்பூர பந்தலில் திருப்பாவை முற்றோதல் மாநாடு நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், கோவை நாராயண ராமானுஜ ஜீயர், டெல்லி விஷ்ணு சித்தராமானுஜ ஜீயர்கள் திருப்பாவை முற்றோதல் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், திருப்பாவை பாடல்களை பாடிக்கொண்டு, நான்குரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.