ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மைதருவார் ஐயப்ப சுவாமி கோயில் 18ம் ஆண்டு மார்கழி மண்டல உற்சவ விழா நடந்தது. விழா துவக்கமாக டிசம்பர் 19ல் கொடியேற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளியம்மன், ஐயப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நேற்று இரவில் ஐயப்ப சுவாமிக்கு ஆயிரத்தெட்டு படி பூஜை செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், இளைஞரணி செயலாளர் மனோஜ் குமார், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் குமார் ஆகியோர் முன்னிலையில் ஐயப்ப சுவாமி ஊர்வலம் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. இன்று நடந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர். குருபகவானுக்கு சிறப்பு பூஜையும் மாகாளி அம்மனுக்கு 108 குடங்களில் பாலாபிஷேகமும் அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துவன்னியன், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கணேசன், பாலமுருகன், பாண்டீஸ்வரன், ரமணி கணபதி உட்பட பலர் செய்திருந்தனர்.