பதிவு செய்த நாள்
28
டிச
2021
11:12
பெங்களூரு: சிவாஜி நகர் ஸ்ரீராமுலா சன்னதி தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டை ஒட்டி, கடந்த, 25ல், உலக அமைதிக்காக 108 கலசங்கள் வைத்து 24 மணி நேரம் மஹா பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி, வரும் 31 இரவு 7:00 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, 8:00 மணிக்கு கணபதி மற்றும் நவக்கிரஹ ஹோமம், துர்கா பரமேஸ்வரி ஹோமம் நடக்கிறது.ஆங்கில் புத்தாண்டான ஜனவரி 1ல், 12:01 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, 108 மஹா கலச ஹோமம்; அதிகாலை 4:00 மணிக்கு புஷ்ப அலங்காரம்; 5:00 மணிக்கு மஹா மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது.காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது.மதியம் 12:00 மணிக்கு அய்யப்பனுக்கு படி பூஜை; 12:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலு, பொருளாளர் சதீஷ் குமார், பொது செயலர் ரமேஷ் செய்து வருகின்றனர்.