ஹர ஹர, சிவ கோஷத்துடன் சிவன் கோயில்களில் ஜீவராசிகளுக்கு படி அருளிய லீலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2021 11:12
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவ பெருமான் படியருளிய, காலபைரவ அஷ்டமி விழா நடந்தது.
பரமகுடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலபைரவாஷ்டமி விழாவையொட்டி, காலை ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்து, மூலவர் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு சுவாமி பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் தனித்தனி தேர்களில் ரிஷப வாகனத்தில் புஷ்பு தேரில் வீதி வலம் வந்தனர். முன்னதாக விநாயகர், முருகன் வள்ளி தெய்வானையுடன் சென்றார். பக்தர்கள் ஹரஹர, சிவசிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அனைத்து ஜீவராசிகளையும் சிவபெருமான் காத்தருளும் வகையில், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
*பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில், காலை அபிஷேகங்கள் நிறைவடைந்து, சுவாமி அம்பாள் தனித்தனியாக தேர்களில் வீதி வலம் வந்தனர்.
*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சுவாமி வீதி வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.