காரைக்கால் தாயிராப்பள்ளியில் கந்தூரி விழா நடைபெற்றது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2021 01:12
காரைக்கால்: காரைக்கால் தாயிராப்பள்ளியில் கந்தூரி விழாவையொட்டி நேற்று ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி ஊர்வலம் நடந்தது.
காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் உள்ள தாயிராப்பள்ளிவாசல் ஹலரத் சுல்தானுல் ஆரிஃபீன் செய்யது அஹ்மதுல் கபீர் ரீஃபாயி(ரஹ்) ஆண்டகை வருடாந்திர கந்தூரி விழா கடந்த 5ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தன குட ஊர்லவம் நடந்தது. நள்ளிரவு 1 மணிக்கு புனித ரவூலா ஷரீஃபிற்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று மதியம் ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி ஊர்வலம் நடந்தது. ஊர்வலகம் முக்கிய வீதிகள் வழியாக இரவு ஷெய்னுல்லாஹ் குதிரை கொடியோற்றம் நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் பலர் கலந்து கொண்டனர். வரும் 31ம்தேதி நிகழ்ச்சிகள் முடிந்து கொடி இறக்கம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.