ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. ஆண்டாள் யானை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்தது.இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், "பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் என்றழைக்கப்படும் திருமஞ்சனம் பெருமாளுக்கும், ஸ்ரீதாயாருக்கும் நடப்பது வழக்கம். பெருமாளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஜேஷ்டாபிஷேகம் நடந்தது.ஸ்ரீரங்கம் ஸ்ரீதாயாருக்கு நேற்று (6ம் தேதி) ஜேஷ்டாபிஷேகம் என்றழைக்கப்படும் திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணிக்கு அம்மா மண்டபம் காவிரியாற்றில் கோவில் யானை ஆண்டாள் தங்க குடத்தில் பட்டர்கள் புடைசூழ புனித நீர் எடுத்து வந்து ஸ்ரீதாயார் சன்னதியை அடைந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதாயார் அணிகலன்கள் அப்புறப்படுத்தப்பட்டு புனித நீரினால் தூய்மை செய்யப்பட்டது. பிறகு தைலக்காப்பிடப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் ஸ்ரீதாயாரை தரிசிக்க நேற்று னுமதிக்கப்படவில்லை.இன்று (7ம்தேதி) திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீதாயார் சன்னதி முன் காய்கனிகளுடன் சாதம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நடைபாதை அம்மாமண்டபத்தில் பணி துவக்கம்
திருச்சி: ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதையுடன் கூடிய நிழற்குடை அமைக்கும் பணி துவங்கியது.முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றப்பின் ஸ்ரீரங்கம் வந்தபோது, தனது தொகுதிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடில் காவிரிபடித்துறையிலிருந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வரை உள்ள மெயின் ரோட்டின் ஓரத்தில், சுற்றுலாத்துறை மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்படும் என்பதாகும்.இந்த நடைமேடை அமைக்கும் பணிகள் கடந்த மூன்று நாட்களாக அம்மா மண்டபம் பகுதியிலிருந்து துவங்கி நடந்து வருகின்றன.இதுகுறித்து திருச்சி நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "மேற்கூரையுடன் கூடிய நடைபாதை 6 அடி அகலம், 520 மீட்டர் நீளம், 8 அடி உயரத்தில் அமையும். தரையில் பேவர் பிளாக்குகள் பதிக்கப்படும். இருபுறமும் கம்பித் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். நடைமேடையை அடுத்துள்ள வீடு மற்றும் களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகள் அமையும் என்றனர்.இந்நிலையில் அம்மாமண்டபம் ரோட்டில் நடைமேடை அமையவுள்ள பகுதிகளில் தெருவிளக்கு கம்பங்களை உள்ளடக்கமாக மாற்றி நடும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் துவங்கினர்.