ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2021 03:12
தேனி: ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆண்டிபட்டி வட்டம், ஜம்புலிபுத்தூரில் அமைந்துள்ளது சக்கரத்தாழ்வார் கோயில். இங்கே, யோக நரசிம்மர், லட்சுமி ஹயக்கீரிவர், தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு சகல வளங்களும் பெற, தொழில் வளம் பெற, கல்வி, கடன் தீற, நோய் நீங்க வழக்கில் வெற்றி பெற, மற்றும் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்க்க சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. புதன் கிழமை தோறும் காலை 7.50 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு ஹோமம் நடைபெறுகிறது. இன்று மார்கழி 2ம் புதன் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.