ஸ்ரீரங்கம் கோயிலில் மார்கழி பாவை நோன்பு: 14ம் நாள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2021 03:12
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் பதினான்காம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
" உங்கள்புழைக்கடைத் தோட்டத்துவாவியுள் செங்கழுநீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பினகாண் செங்கல்பொடிக்கூறை வெண்பல்தவத்வர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் ".... என்ற பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்க்கு "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்" திருக்கோலத்தில் காட்சிகளாக சித்தரித்து அலங்கரிக்கப்பட்டு காட்சிகளாக வைக்கப்பட்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடை பெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.