வண்ணார்பேட்டை பாலாஜிநகர் கணபதி கோயில் வருஷாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2012 11:07
திருநெல்வேலி:வண்ணார்பேட்டை கன்னிமூல கணபதி கோயிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.வண்ணார்பேட்டை பாலாஜி நகர் இந்திரா நகர் கன்னிமூல கணபதி கோயிலில் நேற்று மூன்றாம் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், 9 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணிக்கு நடை திறப்பு, 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, 8 மணிக்கு தீபாராதனை நடந்தது.இன்று (7ம் தேதி) மாலை 6.30 மணிக்கு சங்கரஹர சதுர்த்தி அபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை வண்ணார்பேட்டை பாலாஜி நகர், இந்திரா நகர் அபிவிருத்தி நலச்சங்கம் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.