பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புத்தாண்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2021 10:12
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறுவதை பக்தர்கள் சுவாமி தரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு மார்கழி பூஜைகள் நடந்த பின்னர் காலை 5:30 மணி முதல் மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். மதியம் கோயில் நடை சாத்தப்படுவதில்லை. இது குறித்து கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் என்.கருப்பன்செட்டியார், ஆத்தங்குடிமுத்துப்பட்டினம் சி.சுப்பிரமணியன் செட்டியார் கூறுகையில், ‛ புத்தாண்டன்று சிறப்பு வழிபாடு இல்லை. வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் கூடுதலாக வருவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி முகக் கவசம் அணிந்து வருபவர்கள் சமூக விலகலுடன் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக 3 இடங்களில் அன்னதானம் மற்றும் சுகாதார,குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’. என்றனர். காரைக்குடி, திருப்புத்துார் தீயணபை்புத்துறையினர், 700க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.