பிறந்தது புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு.. மக்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2022 10:01
மதுரை: 2022-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது. 2022 ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி வந்த நிலையி்ல் இன்று முதன்முறையாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2022 புத்தாண்டு வண்ணமயமாக பிறந்த புத்தாண்டை அந்நாட்டுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் 2022 -புத்தாண்டு பிறந்தது. நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுடன் புத்தாண்டு துவங்கியது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பல்வேறு இடங்களில் வான வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.
கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வடபழநி ஆண்டவர் கோவிலில், இன்று (ஜன.,1) அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு இந்து அறநிலைத்துறை விழுப்புரம் வீரவாழிமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.