மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2022 12:01
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவ விழா நடந்தது.
வருண பகவானால் பூஜிக்கப்பட்டதும், ராமாயண இதிகாசத்தை காலத்துடன் தொடர்புடைய பழமையான சிவாலயமாக இக்கோயில் விளங்குகிறது. டிச.,30 (வியாழன்) அன்று மாலையில் 1008 விளக்கு பூஜையும், மாங்கல்ய அர்ச்சனை பூஜையும் விவேகானந்த கேந்திரத்தின் சார்பில் நடந்தது. மாலையில் அன்னதானம், ஆன்மிகச் சொற்பொழிவும், இரவு 10 மணி அளவில் வள்ளி திருமண நாடகம் நடந்தது. நேற்று காலை 5:30 மணியளவில் கோயில் அருகே உள்ள மன்னார் வளைகுடா கடற்கரையில் பக்தர்களுடன் எழுந்தருளிய உற்ஸவமூர்த்தி பூவேந்திய நாதருக்கு தீர்த்தவாரி நடந்தது. மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், உச்சிகால பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.