பழநி: பழநி மலைக்கோயில் செல்ல ரோப்கார் வின்ச் தரிசன முன்னுரிமை கோருவதைத் தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பழநி மலைக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள், பாதயாத்திரையாக முருக பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் வருகை புரிகின்றனர். மலைக்கோயில் செல்ல படிப்பதை வின்ச், ரோப் கார் வசதிகள் உள்ளன. இவற்றில் ரோப்கார், வின்சில் செல்லவும்,சுவாமி தரிசனத்திற்கும் சிலர் கோயில் நிர்வாகத்தினரிடம் முன்னுரிமை கோரி வருகின்றனர். எனவே பக்தர்களின் நலன் கருதி வின்ச், ரோப் கார் மற்றும் தரிசனத்திற்கும் முன்னுரிமை கோருவதை தவிர்த்து உரிய வரிசை முறைகளைப் பின்பற்றி, பிறருக்கு இடையூறு இன்றி மலைக்கோயிலில் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் ஆங்கில புத்தாண்டான இன்று வரும் பக்தர்கள் அமைதியுடனும் விரைவாகவும் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், மற்றும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாலையின் இடது ஓரமாகவும், குழுக்களாகவும் வரவேண்டும். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சமிக்கை ஏற்படுத்தும் ஒளிரும் பட்டை, டார்ச்லைட் பயன்படுத்தி கவனமாக பாத யாத்திரை மேற்கொள்ளுமாறு கோயில் இணை ஆணையர் நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.