அனுமன் ஜெயந்தி: அனுமந்தராய பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2022 02:01
கம்பம: உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டி அனுமந்தராய பெருமாள் திருக்கோயில் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியல் ஆஞ்சநேயருக்கு தனியாக அனுமந்தராய பெருமாள் கோயில் உள்ளது. கோயில் மூலவராக ஆஞ்சநேயர் மட்டுமே உள்ளார். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள நடைபெற்று வருகிறது.. நேற்று மாலை வெண்ணை காப்பு சார்த்தப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் விஸ்வரூப பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து பாலாபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு ஐம்பொன் கவசம் சாத்தப்பட்டது. நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கம்பம் பகுதியில் உள்ள அனைத்து. ஊர்களிலிருந்தும் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து பக்கர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.