காரைக்குடி: காரைக்குடி பர்மா பஜாரில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வடைமாலை சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கடந்த 12 ஆண்டுகளாக இந்து முன்னணி பொதுச்செயலாளர் அக்னி பாலா தனிமையில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பக்தர் ஒருவர் ஆஞ்சநேயர் வேடமிட்டு, ஆஞ்சநேயர் முன்பு மண்டியிட்டு ஆசிபெற்றார். நிகழ்ச்சியில் அன்னதான விழாவும் நடந்தது. சூரக்குடியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயில், சூடாமணிபுரம் ராகவேந்திரா கோயில், ஆவுடைபொய்கை ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.