திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. மூலவருக்கு தங்க கவசம் சாத்துப்படியாகி அருள்பாலித்தார். கூடல் மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி கோயிலில் யாகசாலை பூஜைகள் முடிந்து 11 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்களுக்கு பின்பு வடைமாலை சாத்தப்படியானது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு ஆஞ்சநேய மந்திரங்கள் முடிந்து மூலவருக்கு அபிஷேகம் பூஜைகள், சிறப்பு அலங்காரம் ஆகி வடமாலை சட்டப்படியானது. கல்கத்தா காளி அம்மன் கோயில், மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு கல்களம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் பூஜைகள் முடிந்து வடைமலை சாத்துப்படியானது.