பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பெரியகுளம் பாம்பாற்று ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா மூன்று நாட்கள் நடந்தது.டிசம்பர் 31 மாலை மங்கள இசையுடன் துவங்கியது. விக்னேஸ்வர பூஜை,புண்ணிய வாசம், பஞ்சகவ்வயம்,வேத பாராயணம், ஆஞ்சநேயர் மூல மந்திரம் ஹோமம் பூஜை நடந்தது.இரண்டாம் நாளான நேற்று முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உற்சவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு லட்டு மற்றும் வடை பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
*பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை,வரசித்தி விநாயகர் கோவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை,வடக்கு அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.