பழநி: பழநி தைப்பூச திருவிழாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ரோந்து பணி யில் தோழி இருசக்கர வாகன சேவை துவங்கியது.தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு திண்டுக்கல் போலீசாரின் தோழி என்னும் இரு சக்கர வாகன சேவை உள்ளது. எஸ்.பி., ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தல்படி தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரையாக வரும் பெண்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க தோழி இருசக்கர வாகன ரோந்து பணியில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். பழநியில் 11 வாகனங்கள் நேற்று முதல் ரோந்து பணியில் ஈடுபட துவங்கியுள்ளது. இவை 24 மணி நேரமும் செயல்படும். ரோந்து பணியில் உள்ள தோழி போலீசாரை 100, 1098, 181 மற்றும் போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.