உடுப்பி: கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களிலுள்ள நான்கு முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தின் தரத்தை ஆய்வு செய்ய, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முடிவு செய்துள்ளது.உடுப்பி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரேமானந்தா கூறியதாவது:மத்திய அரசின் திட்டத்தின் கீழ், கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், தரமாகவும் சுகாதாரமாகவும் தயாரிப்பது அவசியம்.முதல்கட்டமாக, கர்நாடகத்தின் உடுப்பி கொல்லுார் மூகாம்பிகை கோவில்; தட்சிண கன்னடாவில் குக்கே சுப்பிரமணியா கோவில், தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கோவில்.உத்தர கன்னடாவின் சிர்சி மாரிகாம்பா கோவில்களில் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் ஆணையம் சார்பில், தரத்தை முடிவு செய்ய கமிட்டி அமையவுள்ளது. இக்கமிட்டியினர், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா; எவ்வாறு கையாள்கின்றனர் என்பதை ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.