பதிவு செய்த நாள்
04
ஜன
2022
04:01
மைசூரு: ஹிந்து கோவில்களின் காணிக்கை பணத்தை, ஹிந்து கோவில்களின் அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு பதில் தேவாலயம், மசூதி அபிவிருத்திக்கு பயன்படுத்த கூடாது," என பா.ஜ., -- - எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறினார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:ஹிந்து கோவில்களின் காணிக்கை பணத்தை, தேவாலயம், மசூதிகளுக்கு எதற்காக கொடுக்க வேண்டும். ஹிந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டாம். கோவிலின் உண்டியல் பணம், கோவில் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் என, அரசு இம்முடிவெடுத்துள்ளது. இவ்விஷயத்தில் யாரும், எங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் தேர்தல் நெருங்குவதால் காங்கிரசார் தந்திரம் செய்கின்றனர். நாங்கள் மக்களின் எதிர்க்காலத்தை மனதில் கொண்டு மேகதாது திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறோம். காங்கிரசாரின் தந்திரத்தை மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள். கொரோனா 3வது அலை பரவும் நிலையில், யாத்திரை நடத்தாதீர்கள். மீண்டும் தொற்று அதிகரித்தால், பா.ஜ., மீது குற்றம்சாட்டாதீர்கள். காங்கிரசின் நோக்கத்தை, மக்கள் புரிந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.