விக்கிரமங்கலம் : விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் கி.பி.10ம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவள்ளி கோயில் உள்ளது. நேற்று இக்கோயிலில் தருமபுரம் ஆதினம் சிறப்பு வழிபாடு நடத்தினார். இக்கோயில் திருப்பணிகளுக்கு ஆதினம் சார்பில் ஒத்துழைப்பு தரப்படும் என தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் மற்றும் கோயில் பிரதோஷ கமிட்டியினர் பங்கேற்றனர்.