நத்தம்: நத்தத்தில் சந்தனம் கருப்புசாமி கோவிலில் கிராம கோவில் பூசாரிகள் பேரவைக் கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய பூசாரிகள் பேரவை அமைப்பாளர் அருணாச்சலம் தலைமையில் நடந்தது. மேலும் அருள்வாக்கு பேரவை மாவட்ட அமைப்பாளர் சாமி, பூசாரிகள் பேரவை இணை அமைப்பாளர்கள் ஜெயராமன், முருகேசன், பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருள்வாக்கு பேரவை அமைப்பாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கிடவும், கிராம பூசாரிகளுக்கு உதவிகளை வழங்கிட அரசை வலியுறுத்துவது, கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும், பூசாரிகளுக்கு அரசு போக்குவரத்தில் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. நிறைவாக நிர்வாகி வீரக்குமார் நன்றி கூறினார்.