திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வீராட்டீஸ்வரர் கோவிலில், 3.50 லட்சம் ரூபாய் செலவில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலை, நான்காம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து கலசங்கள் ஊர்வலமாக கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டன. மாலையில் உற்சவர் திருவீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், கோவில் இணை ஆணையர் தனபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.