காரைக்கால்: காரைக்காலில் கொரோனா தெற்றால் திருநள்ளாறு நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராட தடை குளத்தில் உள்ள நீர் வெளியோற்றும் பணி தீவிரம்.,
காரைக்கால் திருநள்ளாறு உள்ள உலகப்புகழ் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.இதனால் சனிக்கிழமைகளில்,பிற மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்கின்றனர்.முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்தத்தில் புனித நீராடுவது வழக்கம் பின்னர் பகவானை தரிசனம் செய்வது வழக்கம் இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக நளன் தீர்த்தக் குளத்தில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் நீராடுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்தடைவிதிக்கப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் நளன் தீர்த்த குளத்தில் நீர் அதிகம் காணப்பட்டதால் நீராடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது.இதனால் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி நோய் தொற்று பரவலை தடுக்க நளன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராட தடைவிதிக்கப்பட்டது.இதனால் கோயில் நிர்வாகம் குளத்தில் உள்ள புனிதநீரை அனைத்தும் ராட்ச குழாய் மோட்டார் மூலம் நேற்று முன்தினம் இரவு முதல் நீரை வெளியோறும் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது.மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நபர்கள் தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.