விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த திருப்பாச்சனூர் கல்யாண வேங்கடேசப்பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 6ம் தேதி மாலை ஆசார்யவர்ணம், அங்குரார்ப்பணம் நடந்தது. தொடர்ந்து 7ம் தேதி காலை மஹாசாந்தி ஹோமம், அஷ்டப்பந்தனம் சமர்ப்பித்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு புண்யாஹம், விஸ்வரூபம் மற்றும் ஹோமமும், தொடர்ந்து 9 மணிக்கு பூர்ணாஹூதி, அக்னி சமரோபணம், குடம் புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு கல்யாண வேங்கடேசப்பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.