பதிவு செய்த நாள்
09
ஜூலை
2012
11:07
திருச்சி: திருச்சியை அடுத்த எட்டரை அக்னீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. காவிரி நதி பாயும் திருச்சியில், அதன் கிளை நதியான சர்ப நதியின் தெற்கு கரையில், ஸ்ரீரங்கம் வட்டம் எட்டரை கிராமத்தி ல் ஆனந்தவள்ளி சமேத அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.கோவிலில் கும்பிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்தன. கடந்த ஆறாம் தேதி காலை மஹாகணபதி ஹோமமும், காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை, முதற்காலை பூர்ணாஹூதி தீபராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை மங்கள இசை, விஷேச சந்தி, திருமுறை பாராயணங்களுடன் ஹே õமம் நடந்தது. தொடர்ந்து மூன்றாம் கால பூர்ணாஹூதி தீபராதனை நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுட ன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்காம் கால நிறைவு மஹா பூர்ணாஹூ, யாத்ராதானம் முடிவுற்று, கோவில் பிரகாரங்களில் கடம் புறப்பாடு நடந்தது. கோவில் கலங்களில் சந்திரசேகர் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் திருப்பணிகளை திருவானைக்காவல் ஸ்தபதி குணசேகரன் செய்திருந்தார்.விழா ஏற்பாடுகளை எம்.எ ல்.ஏ., பரஞ்ஜோதி, காரியக்காரர் சவுந்தர்ராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.