திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. நேற்று காலை திருவனந்தல் பூஜை, விஸ்வரூப பூஜையை தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் வரும் 12ம் தேதி நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்றைய நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.