மயிலாடுதுறையில் முழு ஊரடங்கு: சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்கள் மூடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2022 01:01
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் முழு வருடங்கள் முன்னிட்டு சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ள தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்களுக்கு வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடைவிதித்துள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. தரங்கம்பாடியில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான டேனிஷ் கோட்டை, 400 ஆண்டுகள் பழமையான புதிய எருசலேம் தேவாலயம் ஆகியவை மூடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோல பூம்புகார் சுற்றுலா தளமும் மூடப்பட்டிருந்தது. கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.