தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2022 02:01
திருவண்ணாமலை: கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கண்காணித்து கட்டுப்படுத்திட வேண்டிய அவசரம் கருதி, கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே, இன்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலினுள் வரும்போது, தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்று அல்லது மொபைல்போனில் பெறப்பட்ட, எஸ்.எம்.எஸ்., காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாவட்ட நிர்வாக முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.