பழநி: பழநி மலைக்கோயிலில் 17 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ 2 கோடியே 15 லட்சம் கிடைத்துள்ளது.
பழநி மலைக்கோயிலில் நாளை தைப்பூசத் திருவிழா துவங்கியுள்ள நிலையில் நேற்று ஜன.10ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. 17 நாட்களில் காணிக்கையாக 652 கிராம் தங்கமும், 11 ஆயிரத்து 202 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 15 லட்சத்து 82 ஆயிரத்து 130 மற்றும் 72 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமிநாதன் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று ஈரோட்டைச் சேர்ந்த முருக பக்தர் பழநி, திருவாவினன்குடி, குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள 12 ஆயிரத்து 735 கிராம் எடையுள்ள வெள்ளி சரவிளக்கை வழங்கினார்.