குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இன்று ஆனி பெருந்திருவிழா!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2012 10:07
ஏரல்: குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா இன்று நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். புகழ்பெற்ற கோயிலான குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 8ம் தேதி முதல் ஆரம்பமானது. அன்று காலை மங்கள இசை கூட்டுவழிபாடு, வில்லிசை நடந்தது. நேற்று மகுடஆட்டம், குரங்கணி 60 பங்கு நாடார்கள் சார்பில் பட்டிமன்றம் நடந்தது. இன்று ஆனிப்பெருந்திருவிழா நடக்கிறது. மாலை 6மணிக்கு மங்களஇசை, சமயசொற்பொழிவு, பக்தி பாடல்கள், இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நடக்கிறது. முன்னதாக மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 11 மணிக்கு ஸ்ரீ நாராயணசுவாமி திருவீதி வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் முக்கிய நிகழ்ச்சிகளாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரங்கணியில் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஸ்ரீவை.,டிஎஸ்பி.,மணி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். வரும் 17ம் தேதி 8ம் நாள் கொடைவிழா நடக்கிறது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கம் சார்பில் நடக்கிறது.