வைகுண்ட ஏகாதசி.. சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2022 03:01
மதுரை: தினமலர் இணையத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தினமலர் இணையதளம் முக்கிய நிகழ்வுகளை எப்போதுமே வாசகர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி வருகிறது. நாளை 13.01.2022 புதன் கிழமை காலை சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்பட முக்கிய பெருமாள் கோவில்களின் சொர்க்கவாசல் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதே போல மதுரை தல்லாகுளம் சீனிவாச பெருமாள் கோயில், கோவை, காரமடை அரங்கநாத பெருமாள் கோயில், புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோயில், சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயில்களில் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைகுண்ட வாசல் திறப்பு விழா நிகழ்வுகளும் நடைபெற இருக்கிறது. மேற்கண்ட கோயில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை நீங்கள் http://www.dinamalar.com ல் தரிசித்து மகிழலாம்.