சென்னை திருமலை திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2022 03:01
சென்னை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் நாளை (13.01.2022) காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கீழ்கண்ட நேரங்களில் பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸர்வ தரிசனம்: காலை 6 மணி முதல் 10 மணிவரை,10.45 மணி முதல் மதியம் 2 மணிவரை, 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை, 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை பெருமாளை தரிசிக்கலாம். பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து, கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது. கோயில் நிகழ்ச்சிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.