திருப்புல்லாணி, ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2022 02:01
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் வைணவ திவ்ய தேசங்களில் 44-வது ஆக திகழ்கிறது. பகல் பத்து உற்ஸவம் நிறைவானதை முன்னிட்டு, நாளை (ஜன., 13) காலை 10 மணிக்கு சயன திருக்கோலமும், இரவு 7 மணிக்கு கோயிலில் பரமபத சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையான முறையில் விழா நடத்தப்படுவதாக கோயில் சமஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஸ்ரீவி., ஆண்டாள்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை காலை 7.35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்களுக்கு அனுமதி இல்லை.