பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இன்று எதிர்பாராதவிதமாக பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் பஞ்சாமிர்தம் விற்பனை நிலையத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பக்தர் ஒருவர் கூறுகையில் மலைக்கோயில் அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் கேட்டபோது 1 மணிநேரம் ஆகும் என்றனர்.