குன்னுாரில் நாகம்மன் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2022 03:01
குன்னூர்: குன்னூரில் ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் நாகம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை காந்திபுரம், இந்திரா நகரில உள்ள நாகம்மன் கோவிலில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாலையில் அம்மன் ஊர்வலம் கோவிலில் துவங்கி லெவல் கிராசிங், மவுன்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு தந்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி மீண்டும் ஊர்வலம் கோவிலை அடைந்தது. விழாவில் கேரள பாரம்பரிய கலைஞர்களின் மயிலாட்டம் இடம் பெற்றது. மேலும் கேரள கலைஞர்கள் சிவன், காளி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமணிந்து ஊர்வலத்தில் நடனமாடி வந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. கொரோனா பாதிப்புக்கு பிறகு குன்னூரில் முதல் முறையாக திருவிழா நடத்தியது பக்தர்களிடையே உற்சாகத்தையும் மன அமைதியும் ஏற்படுத்தியது என பக்தர்கள் தெரிவித்தனர்.