பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மேற்கு யாக்கரையில் உள்ளது சாஸ்தா கோவில். இங்கு எல்லா தை மாதம் 1ம் தேதி மகரவிளக்கு உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை கணபதி ஹோமத்துடன் கோவில் நடை திறந்தன. தொடர்ந்து உஷ பூஜை, செண்டை மேளம் முழங்க 3 யானைகள் அணிவகுப்புடன் புழைக்கல் ஸ்ரீ மஹா கணபதி கோவிலில் இருந்து தீர்த்தம் தீர்த்தம் கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தனர். முன்னதாக செர்ப்புளச்சேரி அனந்த பத்மநாபன் என்ற யானைக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர். 10 மணியளவில் நவகம், பஞ்சகவ்யம் ஆகிய அபிஷேகங்கள் மூலவருக்கு செய்யப்பட்டனர். தொடர்ந்து புஷ்பாலங்காரம் பூஜை, உச்ச பூஜை, யானைகளுக்கு உணவு அளிக்கும் யானையூட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை யானைகளின் அணிவகுப்புடன் பாலகொம்பு எழுந்தருளும் வைபவவும் ஐயப்பன் பாட்டு, பால் கிண்டி எழுந்தருளல், குருதி தர்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.